நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானிலையில் மாற்றம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (18) அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
உறைபனி பெய்ய வாய்ப்பு
நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
கடல் கொந்தளிப்பான நிலை
கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று வீசக் கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan