டுபாயிலிருந்து இலங்கை வந்த இளைஞன் விமான நிலையத்தில் கைது
நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (17) மாலை 5.00 மணியளவில் எமிரேட்ஸ் விமானமான EK-654 மூலம் டுபாயிலிருந்து நாட்டிற்கு வந்தபோது வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விவகாரம் குறித்து மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறையைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவர் தனது 03 பொதிகளில் மறைத்துவைத்திருந்த 68,85,000 ரூபாய் மதிப்புள்ள 44,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் 15 இ-சிகரெட்டுகள் அடங்கிய 222 அட்டைப் பெட்டிகள் சிகரெட்டுகளை எடுத்துச்சென்றபோது கைது செய்யப்பட்டார்.
இதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து, இந்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan