வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட உலருணவுப் பொதிகள்
வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு தொகுதி உலருணவுப் பொருட்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (23.12.2023) இடம்பெற்றுள்ளது.
உலர் உணவுப் பொதி
தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நோக்கில் சர்வதேச அரிமா கழகத்தினால் ஆயிரம் பொதிகள் ஆளுநரின் உதவிச் செயலாளர் ஜி.ஏகாந்தனிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதியின் வடக்கு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் இளங்கோவன், ஆளுநர் செயலக அதிகாரிகள், வடமாகாண அரிமாக் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த பொதிகள் விரைவில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan