யாழில் போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 6 பேர் கைது
யாழ்ப்பாணம் - வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவில் பல இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மூன்று பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை குறித்த மூன்று சந்தேக நபர்களுக்கும் பதினான்கு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவளை நேற்று பிற்பகல் போதைப்பொருள் குற்றச்சாட்டு மற்றும், திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண்களும், ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆபத்தான மது போதை குற்றச்சாட்டு
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 676500 ரூபாய் பெறுமதியான கஞ்சா மற்றும் ஆபத்தான போதைப் பொருட்களும், நூறு லிட்டர் கசிப்பு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட கைத் தொலைபேசிகளும், ஐந்து வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
பெண்ணொருவர் கைது
யாழ்ப்பாணம் - துன்னாலை குடவத்தை பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருளுடன் பெருந்தொகை பணம் மற்றும் பெருமளவான தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.
43 வயதான குறித்த பெண் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்று (21) கைதுசெய்யப்பட்டார்.
620 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் 678,900 ரூபா பணமும் 16 கையடக்க தொலைபேசிகளும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. குறித்த பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று பிற்பகல் ஆபத்தான மது போதை குற்றச்சாட்டு, திருட்டு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்நேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன் அவர்களை இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் ஏடுக்கப்பட்டு வருவதாக நெல்லியடி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி-தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri
