ஐஸ் போதைப்பொருள் இரசாயனம்! கைது செய்யப்பட்டவரின் சகோதரியின் முறைப்பாடு
கொழும்பில் தங்களுக்கு நிம்மதியாக இருக்க முடியாதளவில் பொலிஸார் செயற்படுவதாக மனம்பேரியின் சகோதரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
ஐஸ் போதைபெருள் தயாரிப்பதற்காக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இரசாயனம் மித்தெனியவில் புதைக்கப்பட்டதில் சம்பந்தப்பட்ட மொட்டுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களான இரு சகோதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனம்பேரியின் சகோதரியே இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“நான் கொழும்பில் சிறு கடையில் சில்லறை வியாபாரம் செய்து வாழ்ந்து வருகின்றேன். கடந்த 04ஆம் திகதி எனது சகோதரனை கைது செய்துள்ளனர். என்ன காரணம் என்று சொல்லவில்லை. பொலிஸார் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
மனம்பேரியின் சகோதரி
முகம் வீக்கம் அடைந்திருந்தது. அதைத் தொடர்ந்து குடும்பத்தில் அனைவரையும் கைது செய்கின்றனர். இது என்ன நீதி என்று தெரியவில்லை. எமது குடும்பத்தினர் பயத்தில் உள்ளனர்.
எங்களுக்கு இது தொடர்பில் ஒன்றும் தெரியாது. நாங்கள் சாதாரண மனிதர்கள். அண்ணனின் மனைவியை கைது செய்து வைத்திருந்தனர்.
அவரின் குழந்தைக்கு 3 மாதங்கள் தான். இப்போது அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வீட்டுக்கு யாரும் வரமடியாது. அப்படி வந்தாலும் இந்த வீட்டுக்கு போக வேண்டாம் என பொலிஸார் கூறுகின்றனர். இன்று காலை எனது வீட்டுக்குள் நுழைந்து வீட்டை பரிசோதித்தனர்.
வீட்டுக் காவல்
மேலும் எனது இரு கையடக்க தொலைபேசிகள் மற்றும் கணவரின் தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர். பின்னர் எங்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ராகமயில் உள்ள அண்ணனின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.
எனக்கு இரு குழந்தைகள் இருக்கின்றன. பின்னர் கணவரை கொண்டு செல்ல முயற்சிக்கையில் நான் கத்தியதில் ஒன்றும் நடக்கவில்லை.
பின்னர் தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள போலியாகொடை யுனிட்டுக்கு வர வேண்டும் என்றனர். எங்கள் வீட்டுக்கு முன் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரின் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பிள்ளைகள் பாடசாலைக்கு போகவில்லை. நாங்கள் எவ்வாறு சமூகத்திற்கு முகம் கொடுப்பது?, என்ன குற்றத்திற்காக என ஒன்றும் புரியவில்லை” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
