யாழ்.மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம் (Photos)
யாழ்.மாவட்டத்தில் சமீப காலமாக டெங்குநோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக செங்கற்படை மஹாதேவா பிள்ளையார் ஆலய அருகிலுள்ள காணியில் பெருமளவான இளநீர் கோம்பைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு டெங்கு நுளம்பு பரவும் பேரபாயம் காணப்படுகின்றது.
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்டதும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஏழாம் வட்டாரத்தில் ஜெ/179 கிராமசேவகர் காணப்படும் இக்காணியில் ஆலய பூசைகளின்போது பயன்படுத்தப்பட்ட இளநீர் குரும்பைகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரு மரணங்கள்
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியல் சுமார் 3100 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில வாரங்களில் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் உச்சங்கண்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரும் அறிவித்திருந்தார். சமீபத்திய தகவலின்படி கிட்டத்தட்ட 1000பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri