விஜயை விட பலசாலிகளாலேயே முடியவில்லை..! சபையில் சாடிய எதிர்க்கட்சி எம்.பி
விஜயை விட பலம் வாய்ந்தவர்கள் ஆட்சி செய்தும் கச்சத்தீவை வாங்க முடியாமல் போனதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று(09.09.2025) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி கச்சத்தீவுக்கு விஜயம் செய்ய வேணிடியதில்லை. விஜயால் மட்டும் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து பெற முடியாது. கச்சத்தீவு என்பது இந்தியாவின் மத்திய அரசாங்கம் பேச வேண்டிய விடயமாகும்.
அரசியல் நாடகம்
விஜயை விட பலம் வாய்ந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றோர் தமிழ்நாட்டை ஆட்சி செய்த போதும் கச்சத்தீவில் கை வைக்க முடியவில்லை.
ஆகவே, இந்த அரசியல் நாடகத்தை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி உண்மையில் அறுகம் குடாவுக்கு செல்ல வேண்டும்.
அப்பகுதியை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கும் போது, பலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுத்து விட்டு தற்போது இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
