ரணில் - கோட்டாபயவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள்
காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தவறினார்கள் என்று அவர்களுக்கு எதிரான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும், அதன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும் கோரியே குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றாடல் நீதி மையம் குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ள நிலையில் வழக்கு உயர்நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வின் முன் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கு தொடர்பான ஆட்சேபங்களைத் தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
