இலங்கையின் ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட பெருமளவு போதைப்பொருள்.. 11 பேர் கைது
புதிய இணைப்பு
இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் நேற்று (27) தடுத்து வைக்கப்பட்ட இரண்டு பல நாள் கடற்றொழில் படகுகளில் ஹெரோயின் மற்றும் படிக மெத்தம்பெட்டமைன் (ICE) உள்ளிட்ட சுமார் 450 கிலோ போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 11 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் தெய்வந்துறையைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்ட இரண்டு கப்பல்களும், திக்கோவிட்ட கடற்றொழில் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மேலும், தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் கடற்றொழில் படகுகள் நேற்று கைப்பற்றப்பட்டன.
இலங்கை கடற்படையின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் (PNB) இணைந்து மேற்கொண்டுள்ளன.
முதலாம் இணைப்பு
இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின்போது மீண்டும் ஒருமுறை அதிகளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிக அளவான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படும், இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை நேற்று(27) இரவு அறிவித்துள்ளது.
பெருமளவு போதைப்பொருள்
இந்த நடவடிக்கை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எந்தளவு தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன? இதன்போது கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
முன்னரும் பல தடவைகளாக இதுபோன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
