சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி : பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்கிய சம்பவம் தொடர்பாக கோகரெல்லா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (மே 24) நடந்த நிலையில் அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கும் ஒரு நபருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அது தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளது.
இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி தனி நபரை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில் குறித்த பணி இடைநீக்கம் இடம்பெற்றுள்ளது.

யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் ஓமந்தை விபத்தில் பலி - மனைவி உட்பட மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்
வாக்குவாதத்தின் போது
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கோகரெல்லவில் உள்ள இப்பாகமுவ - மடகல்ல வீதியில் அதி வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றதால் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
