யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் ஓமந்தை விபத்தில் பலி - மனைவி உட்பட மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்
யாழ் - கண்டி பிரதான வீதியில் வவுனியாவின் ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். காரில் காயமடைந்த மூன்று பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தந்தை பலி
காரை ஓட்டிச் சென்றவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம் செய்துள்ளனர். தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் யாழில் உள்ள இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் சஜ்யிதானந்த பிரபாகர குருக்கள் வயது 52 என்பவர் பலியாகியுள்ளதுடன், அவரின் மனைவி பி.சீத்தாலட்சுமி (வயது - 50), மகன் பி.அக்ஸய் (வயது 27), மாமனார் சுவாமிநாதன் ஐயர் (வயது - 70) படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் உட்பட இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You May Like This Video

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
