பூரு முனாவுக்கும் பொலிஸ் சிறப்புப் அதிரடிப்படையினருக்கும் இடையே மோதல்
பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ரவிந்து சங்க டி சில்வா எனப்படும் பூரு முனாவுக்கும், பொலிஸ் சிறப்புப் அதிரடிப்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த மோதல் இன்று(24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்காக கணொளி தொழில்நுட்பம் மூலம் முன்னிலையாவதற்கு அவர் சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டபோது குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது.
அதிகாரிகள் சோதனை
பூரு முனாவை அதிரடிப்படையின் அதிகாரிகள் சோதனை செய்தபோதே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் பூரு முனா மற்றும் இரண்டு பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகள் காயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 18 மணி நேரம் முன்

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

இஸ்ரேலை விட்டு வெளியேறும் யூதர்கள்.. வெளியே கூறமுடியாத இஸ்ரேலின் மிகப் பெரிய இராணுவ இழப்பு News Lankasri
