போதைப்பொருள் கடத்தல்: இந்திய தேசிய புலனாய்வுத் துறையினரின் நடவடிக்கை
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக இலங்கையிலும் இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படும் ஆயுத மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தாம் நேற்று தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக இந்திய தேசிய புலனாய்வுத் துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரின் டுவிட்டர் தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
NIA Conducts Search in Chengalpattu district, Tamil Nadu in the illegal Drugs and Arms trade in India & Sri Lanka case (RC-29/2022/NIA/DLI) pic.twitter.com/LFrbmEznoI
— NIA India (@NIA_India) August 5, 2022
தேடுதல் நடவடிக்கை
இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரர் குணா என்ற குணசேகரன், புஸ்பராஜ், பூக்குடி கண்ணா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஆயுதக் கடத்தல்காரரான ஹாஜி சலீம் ஆகியோருடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டிலேயே இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தேடுதலின் போது ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக
இந்திய புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 9 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
