தேசபந்து தென்னகோனின் நியமனத்தை எதிர்க்கும் சட்டத்தரணிகள்: டிரான் அலஸ் குற்றச்சாட்டு
பதில் காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமையை எதிர்க்கும் சில சட்டத்தரணிகள் தற்போது பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் முன்னிலையாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த வழக்குகள் மூலம் இந்த சட்டத்தரணிகள் பில்லியன் கணக்கான ரூபாவை சம்பாதிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி சில ஆட்சேபனைகள் அல்லது அழுத்தங்கள் இருந்தபோதிலும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தானும் பதில் காவல்துறை அதிபரும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசேட காவல்துறை நடவடிக்கை
அதன்படி நேற்று நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்றை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
இதன் விளைவாக, 24 மணித்தியாலங்களுக்குள் 2,000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கணிசமான அளவு போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
