போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் உறுதியான நிலைப்பாடு

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Crime
By Rakesh Oct 18, 2025 11:18 PM GMT
Report

இந்த நாட்டை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு அடியோடு முடிவு கட்டியே தீருவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை விமானப்படைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கல் மற்றும் கெடெட் அதிகாரிகளை விமானப்படை அதிகாரிகளாக நியமிப்பது தொடர்பில் இன்று சனிக்கிழமை காலை சீனக்குடா விமானப் படைக் கல்விப்பீடத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

கடல் மார்க்கத்தில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிப்பதில் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். அனர்த்த காலங்களில் இலங்கை விமானப்படை ஆற்றிய பரந்தளவிளவிலான பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

'சுரகிமு லகபர' என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கையின் நீல வானத்தைப் பாதுகாக்கும் இலங்கை விமானப்படையின் 3 ஆவது சமுத்திரப் படைப் பிரிவு, தாய்நாட்டைப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக மேற்கொண்டுவரும் உயர்ந்த சேவை, செயல்பாட்டுச் சிறப்பு மற்றும் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டும் வகையில், ஜனாதிபதி வர்ண விருது வழங்கப்பட்டன.

விசேட விருதுகள்

இலங்கை வான்வெளியைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் இலங்கை விமானப்படையின் உறுப்பினர்களாக விமானப்படையில் இணைந்த 66வது, 67வது மற்றும் 68வது கெடெட் அதிகாரி பாடநெறியை பூர்த்தி செய்த அதிகாரிகளை விமானப் படை அதிகாரிகளாக நியமித்தல் மற்றும் 103ஆவது இலக்க பறக்கும் கெடெட் அதிகாரி பாடநெறியை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு பறக்கும் அதிகாரி சின்னம் அணிவித்தல் என்பன முப்படைத்தளபதி ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் உறுதியான நிலைப்பாடு | Drug Trade President Anura Kumara

பாடநெறியில் அதிவிசேடமான திறமைகளை வெளிப்படுத்திய கெடெட் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் விசேட விருதுகள் வழங்கப்பட்டன. பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, "இன்று, 66 கெடெட் அதிகாரிகள் மிகவும் ஒழுக்கமான மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சிக்குப் பிறகு அதிகாரி பதவிக்கு பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்த அதிகாரிகளின் வாழ்க்கையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும்.

இலங்கை விமானப்படையில் இது மிகவும் அரிதான வாய்ப்பாகும். எனவே, உங்கள் பெற்றோர் உங்களைப் பற்றி முதலில் பெருமைப்படுவார்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளை ஒரு மரியாதைக்குரிய, தொழில்முறை பணியில் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கனவும் உள்ளது. இன்று, உங்கள் பெற்றோரின் நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் நீங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள்.

இலங்கைத் தாய்க்காக எங்கள் விமானப்படைக்கு மிகவும் துணிச்சலான, இளம், துடிப்பான குழுவை கொண்டு வருவதில் அவர்கள் செய்த பங்களிப்பிற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க, மரியாதைக்குரிய மற்றும் மிகவும் தொழில்முறையுடன் கூடிய மற்றும் திறமையான இராணுவத்தில் இணைகிறீர்கள்.

உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் பொறுப்பு இந்த நற்பெயரையும் மரியாதையையும் தொடர்ந்து பாதுகாப்பது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு அதிகாரி செய்யும் எந்தவொரு தவறான செயலும் முழு விமானப்படையின் நற்பெயரையும் பாதிக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் இனி மேலும் ஒரு சாதாரண இளைஞன் அல்ல.

 முக்கியமான பணி

நீங்கள் ஒரு இராணுவத்தின் நற்பெயர், மரியாதை மற்றும் மதிப்பை உங்கள் தோள்களில் சுமந்த ஒரு அதிகாரி. அந்த இராணுவத்தின் மரியாதை மற்றும் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், நமது தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பொறுப்பு உங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. நமது தாய்நாட்டின் வான்வெளியின் பாதுகாப்பு உங்களைச் சார்ந்தது என்பதை நாங்கள் அறிவோம்.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் உறுதியான நிலைப்பாடு | Drug Trade President Anura Kumara

இது ஒரு தனித்துவமான மற்றும் ஈடுசெய்ய முடியாத பொறுப்பாகும். நமது தாய்நாட்டின் பாதுகாப்பிற்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும், உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள உயர்ந்த பொறுப்பை நீங்கள் சரியாக நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையும் பிணைப்பும் எங்களுக்கு உள்ளது. மேலும், நமது கடற்பரப்பின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறீர்கள்.

இன்று நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்புகளில், நாடென்ற வகையில் நமது கடற்கரையின் எல்லைகளைக் கண்காணித்து அதன் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், நமது கடல் எல்லை ஊடாக குறிப்பாக சட்டவிரோத குடியேற்றவாசிகள், சட்டவிரோத பொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் அண்மைக்காலத்தில் ஆயுதங்கள் கூட நாட்டுக்குள் எடுத்துவரப்பட்டதை நாம் கண்டிருக்கிறோம். எனவே, கடல் எல்லையைப் பாதுகாப்பது என்பது தாய்நாட்டின் மற்றும் தாய்நாட்டில் வாழும் மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையாகும்.

அந்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் நீங்கள் முறையாக நிறைவேற்றுவீர்கள் என்று எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. குறிப்பாக இன்று, போதைப்பொருள், அவற்றுடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் அந்தக் குற்றங்களுடன் தொடர்புடைய அரசியல் மற்றும் அரச இயந்திரம் இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்.

அதன் ஆழத்தையும் அளவையும் நாம் அளவிட முடியும். இது வெறும் போதைப்பொருள் கடத்தல்களோ வெறும் குற்றச் செயல் மேற்கொள்ளும் கும்பல்களின் செயற்பாடுகளோ அல்ல. இது அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அரச இயந்திரத்தின் சில பகுதிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதற்குப் பங்களித்துள்ளன.

அந்தப் பேரழிவு நமது கிராமங்களுக்கும் பரவி வருகின்றது. எனவே, அந்தப் பேரழிவைத் தடுப்பதில் கடல்சார் கண்காணிப்பு மிகவும் முக்கியமானது. எனவே, அந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகளை முறையாகச் செயற்படுத்தி, தாய்நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காகப் பணியாற்றும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், நமது நாட்டில் இடம்பெறும் திடீர் அனர்த்தங்களின் போது ஈடுசெய்ய முடியாத பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அண்மையில் எல்ல பகுதியில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உங்கள் தலையீட்டை முழு நாடும் அவதானித்தது என்பதை நான் அறிவேன். உங்கள் பணி ஒரு முக்கியமான பணி என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.

எனவே, திடீர் அனர்த்தங்கள் ஏற்பட்டால் விமானம் மூலம் வழங்க வேண்டிய ஆதரவு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் மிகவும் திறமையாகச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். மேலும், நமது நாட்டுக்குத் தேவையான விமானிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளை பயிற்றுவித்து தொடர்ந்து பேணும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்று நீங்கள் நமது நாட்டின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாகவும்,பொறுப்புவாய்ந்தவர்களாகவும் முக்கியத்தும் பெறுகிறீர்கள். இன்று, இந்த நாட்டில் உள்ள அனைத்து தொழில்களுக்கும் தொழில்முறைமை அவசியம். இன்று, நம் நாட்டில் உள்ள பல தொழில்களின் தலைவிதி மிகவும் நம்பிக்கைக்குரியதாக இல்லை. அதன் பாதுகாப்புக்காகவே தொழில்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது அதன் பாதுகாப்பின்மைக்காக செயற்படுகின்றது. அரச நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் பொறுப்பு குறித்து நாட்டு மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. பிரஜைகளின் வரிப் பணத்திலிருந்து அவர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவர்களில், மக்களுக்கு எதிராக இந்தத் தொழிலை பயன்படுத்தும் ஒரு சிலரும் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இன்று, நம் நாட்டின் அரச இயந்திரத்தில் தொழில்முறை குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆனால், நமது விமானப்படை அதன் தொழில்முறையை மிகவும் வலுவாகப் பாதுகாத்துள்ளது என்பதை பெருமையுடனும் பொறுப்புடனும் கூறலாம். எனவே, ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை மற்றும் திறமை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் கூடிய அரச சேவை எங்களுக்குத் தேவை. எனவே, உங்களிடம் மிகவும் தொழில்முறையான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை நீங்கள் முறையாக நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. உங்களிடம் மிக உயர்ந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உங்கள் சிரேஸ்ட அதிகாரிகள் உங்களைக் கண்காணிக்கிறார்கள். தொழில்முறை, மரியாதை மற்றும் புகழ் வழங்கப்பட்ட இந்த சேவையை நீங்கள் அதே வழியில் தொடருவீர்கள் என்று அவர்கள் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும், உங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும், இந்த நாட்டின் பொதுமக்கள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் பொறுப்பை மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகின்றார்கள்.

இவை அனைத்தையும் போலவே, உங்களை நானும் ஜனாதிபதி என்ற வகையில் மிகுந்த நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் கண்காணிக்கிறேன். எங்கள் தாய்நாட்டையும் மக்களையும் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பெரும் பேரழிவிலிருந்து விடுவிக்க வேண்டும். அதில், ஒரு அரசியல் அதிகாரம் என்ற வகையில் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நாங்கள் முறையாக நிறைவேற்றுவோம்.

விமானப்படை அதிகாரிகளாக உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நீங்கள் முறையாக நிறைவேற்றுவீர்கள் என்ற வலுவான நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது. எனவே, நீங்கள் பிரவேசித்துள்ள இந்த சந்தர்ப்பம் ஒரு சிறந்த வாய்ப்பு.

உங்கள் தொழிற்துறை வாழ்க்கையிலும், உங்கள் எதிர்காலத்திலும் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும். இந்த பெறுமதியான வாய்ப்பை நீங்கள் தவறவிடாமல் உங்கள் எதிர்காலம், தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனுக்காக உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை முறையாக நிறைவேற்றுவீர்கள் என்ற வலுவான நம்பிக்கையுடன் உங்களை வாழ்த்துகின்றேன்." - என்றார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US