போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையில் மோதல் :பொதுமக்கள் உட்பட 11 பேர் பலி-செய்திகளின் தொகுப்பு
வட அமெரிக்காவின் மெக்சிகோவில் உள்ள சில்டட் ஜூவரிஸ் நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நாட்டில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது இவர்களுக்கிடையே மோதல்கள் வெடித்த வண்ணமுள்ளன.
இந்நிலையில் இந்த போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விநியோக கும்பலை சேர்ந்த இரண்டு குழுக்கள் சில்டட் ஜூவரிஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் நேற்று ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டுள்ளனர். இந்த மோதலில் 20 பேர் படுகாயமடைந்தனர் 2 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறைச்சாலைக்கு வெளியேயும் இந்த கும்பல்கள் மோதிக்கொண்டன. மோதலில் கண்ணில் பட்ட பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு தள்ளியுள்ளனர். வானொலி நிலையத்தின் ஊழியர்கள் நால்வர் என 9 பொதுமக்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
