நீரில் மூழ்கி மூன்று பிள்ளைகளின் தந்தை பலி! (Photos)
சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சந்திவெளி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்திவெளி, வட்டையார் வீதியை சேர்ந்த கந்தையா பவானந்தன் (43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (12.04.2023) மீன்பிடிக்க சென்ற தந்தை, இன்று காலை(13.04.2023) காலை உரிய
நேரத்துக்கு கரை திரும்பாததால், இவரது மகன்கள் இருவர் தோணியொன்றில் சென்று
தேடியபோது, தோணியிலிருந்து வலை வீசும் போது தவறி விழுந்து
வலைக்குள் சிக்குண்டதால் அதிலிருந்து மீளமுடியாமல் நீரில் மூழ்கி
மரணமடைந்திருப்பதை கண்டுள்ளனர்.
பின்னர் மகன்கள் இருவரும் சேர்ந்து தந்தையின் சடலத்தை கரைக்கு கொண்டுவந்த பின் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
சந்திவெளி பொலிஸ் நிலைய் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று சம்பவ இடத்துக்கு சென்ற மரணவிசாரணை அதிகாரி MSM.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
பிரேத பரிசோனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



