பராகா அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்.. எழுந்துள்ள கடும் கண்டனம்
அபுதாபியில் உள்ள பராகா அணுமின் நிலையம் மீது ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, தனது எல்லைப் பகுதியிலிருந்து பிற நாடுகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் விரோதப் போக்கிலான செயல்களை ஈராக் அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு இராச்சியம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
"தனது இறையாண்மைக்கு உட்பட்ட எல்லைப் பகுதியிலிருந்து அண்டை நாடுகளுக்கு எதிராகத் திட்டமிடப்படும் அனைத்து விதமான விரோதச் செயல்களையும் ஈராக் குடியரசு எவ்வித நிபந்தனையுமின்றி, மிக அவசரமாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அச்சுறுத்தல்கள்
சர்வதேச மற்றும் பிராந்திய சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின்படி, இதுபோன்ற அச்சுறுத்தல்களை ஈராக் அரசு உடனுக்குடனும், பொறுப்புடனும் கையாள வேண்டும்" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பிராந்தியத்தின் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநிறுத்துவதில் ஈராக் தனது பங்கைச் சரியாக ஆற்ற வேண்டும் என்றும், அதன் மூலமே ஈராக் தனது சொந்த இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்வதுடன், அண்டை நாடுகளுக்கு மத்தியில் ஒரு பொறுப்புள்ள பங்காளியாகத் தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அமீரக வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்தும் சுமந்திரன்.. யாழ். பல்கலை விரிவுரையாளர் முன்வைத்த குற்றச்சாட்டு