இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்பில் வியப்பில் ஆழ்ந்துள்ள ஜனாதிபதி அநுர..!
இலங்கையில் தமிழ் மக்களின் வாசிப்பு மீதான ஆர்வத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய பொது நூலகக் கட்டடம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்த இந்த நூலகத்தின் கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதைக் காண்பது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்தார்.
நூலகம் திறப்பு
இந்நிகழ்விற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

“நாட்டின் வாசிப்பு கலாச்சாரம் நலிவடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில், தமிழ் மக்கள் வாசிப்பு மீது இன்னும் காட்டி வரும் ஆர்வம் பாராட்டத்தக்கது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நூலகத்தைத் திறப்பது என்பது ஒரு சிறைச்சாலையின் தேவையை இல்லாது செய்வதற்கு சமமாகும்.
இந்த புதிய பொது நூலகக் கட்டடம் திறக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்களின் புத்தக வாசிப்பு கலாச்சாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வது ஊக்குவிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
you may like this