சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு
சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகம் செய்வது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
சுமார் நான்கு லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இன்னமும் விநியோகம் செய்யப்படாது நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கால தாமதம்
கடந்த காலங்களில் சுமார் 850,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகம் செய்யப்படாதிருந்தததாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிசாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த எண்ணிக்கை தற்பொழுது நான்கு இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதோடு, திணைக்களத்தின் பணியாளர்கள் இரவு பகலாக கடமையாற்றி நாளொன்றுக்கு சுமார் பத்தாயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
தபால் மூலம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அனுப்பி வைக்கும் போது கால தாமதம் ஏற்படுகிறது.எதிர்வரும் ஜூன் மாதமளவில் சாரதி அனுமதிப்பத்திர விநியோகத்தில் காணப்படும் கால தாமதம் நிவர்த்தி செய்யப்படும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
