அமெரிக்காவில் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கறுப்பினத்தவர்கள் : எழுந்துள்ள சர்ச்சை
அமெரிக்கன் ஏர்லைன்ஸ்(American Airlines) விமானத்தில், தங்களுக்கு எதிராக இனப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி மூன்று கறுப்பினத்தவர்களால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஒல்வின் ஜாக்சன், இம்மானுவேல் ஜீன்-ஜோசப் மற்றும் சேவியர் வேல்ஸ் உட்பட ஐந்து கறுப்பின பயணிகள், அவர்களின் உடல்களில் துர்நாற்றம் வீசுவதாக கூறி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இனத்தின் அடிப்படை
குறித்த விமானம் பீனிக்ஸ் நகரில் இருந்து நியூயார்க்கில் உள்ள JFK விமான நிலையத்திற்கு செல்ல தயாரான போது, இந்த சம்பவம், 2024 ஜனவரி 5 அன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் எந்த சரியான காரணமும் இல்லாமல், தங்கள் இனத்தின் அடிப்படையில் மட்டுமே வெளியேற்றப்பட்டதாக முறைப்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமானம் புறப்படுவதற்கு முன் அவர்களை அணுகி, விமானத்தில் இருந்து இறங்கும்படி கட்டளையிட்டபோது, அவர்கள் அதற்கு இணங்கினார்கள்.
இதன்போது, அவர்கள் விமான பாலத்தை அடைந்தவுடன், விமானத்தில் இருந்து மேலும் பல கறுப்பின மனிதர்களும் அகற்றப்படுவதைக் கண்டுள்ளார்கள்.
வெளியிடப்பட்ட அறிக்கை
இதன்படி விமானத்தில் இருந்த அனைத்து கறுப்பின ஆண் பயணிகளையும் விமானத்தில் இருந்து இறக்கிவிடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, முறைப்பாட்டாளர்களுக்கு தோன்றியது.
இதன் பின்னரே உடல் துர்நாற்றம் பற்றிய முறைப்பாடு குறித்து அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.எனினும் தம்மில் எவருக்கும் உடல் ரீதியான துர்நாற்றம் இல்லை" என்று அவர்கள் தமது முறைப்பாட்டில் கூறியதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாட்டை அடுத்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதோடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |