அரசுக்கெதிராக ஹட்டன் மக்கள் வீதிக்கிறங்கி போராட்டம் (Video)
ஹட்டன் நகரில் உள்ள பிரதான வழிகளை மறித்து சாரதிகளும், முச்சக்கரவண்டி ஓட்டுநர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், ஹட்டன் நகரம் பகுதியளவு ஸ்தம்பிதமடைந்துள்ளது.
ஹட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்வதற்கு நேற்று மாலை முதல் சாரதிகள் காத்திருந்திருந்துள்ளனர்.
எனினும், இறுதி நேரத்தில் டீசல் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சாரதிகள் பொதுமக்களுடன் இணைந்து ஹட்டன் மணிக்கூட்டு கோபுரம் சந்தியில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொலிஸாரின் தலையீட்டுடன் போராட்டம் நிறுத்தப்பட்டது.
இன்று காலை 9 மணிக்கு டீசல் விநியோகிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. எனினும், அந்த உறுதி மீறப்பட்டதால் சாரதிகள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், இந்த அரசு வீடு செல்ல வேண்டும் எனவும் கோஷம் எழுப்பியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி
டீசல் முடிந்ததால் வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாகன சாரதிகள் (Video)









என் அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளி சென்றார், ஆனால் நான்.. கல்வி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan
