கனடா அனுப்புவதாக கூறி பாரிய மோசடி: பம்பலப்பிட்டியில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது
கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களை பண ரீதியில் ஏமாற்றியதற்காக பம்பலப்பிட்டியில் சந்தேகத்தின் பேரில் மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் போலி விசா ஸ்டிக்கருடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், 69 வயதுடைய ஆண், ஒருவரும் 26 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்களும் அடங்குவர்.
பிற மோசடிகள்
கனடாவுக்கு மக்களை அனுப்புவதாகக் கூறி, பெண் சந்தேக நபர், இருவரிடம் 3,831,000 ரூபா மற்றும் 3,436,000 ரூபா என்ற வகையில் பணத்தை மோசடி செய்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் இது போன்ற பிற மோசடிகளில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
