ஐ.நா. சபையில் பெஞ்சமின் நெதன்யாகு உரையை ஆரம்பித்ததும் நடந்த செயல்
ஐநா பொதுச்சபையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பேச்சை ஆரம்பித்ததும் அங்கிருந்த பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்துள்ளமையானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80வது ஐநா பொதுச்சபை கூட்டம் நடந்து வருகின்றது.
பிரதிநிதிகள் வெளிநடப்பு
இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தி வருகிறார்கள்.
மேலும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பேசதொடங்கியதும் அங்கிருந்த பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இருப்பினும் சிலர் கைதட்டி அவரை வரவேற்றுள்ளனர். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
எனவே நெதன்யாகு வெறிச்சோடிய ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
நெதன்யாகுவின் உரை
அப்போது உரையாற்றிய அவர், “பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம். பிணைக்கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது. ஹமாஸை அழிக்கும் வரை காசாவில் போர் தொடரும்.
Over a hundred diplomats from more than 50 countries staged a mass walkout as Israeli Prime Minister Benjamin Netanyahu entered the United Nations General Assembly hall, crowding into aisles to file out through the room’s various exits. https://t.co/UuHosO7RWb pic.twitter.com/pxsTtbntyN
— The Washington Post (@washingtonpost) September 26, 2025
காசாவில் பஞ்சத்திற்கு ஹமாஸ் உணவை திருடுவதே காரணம். உலகின் பெரும்பகுதியினர் ஒக்டோபர் 7ஆம் திகதியை நினைவு கொள்வதில்லை.
ஆனால் நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதைவிட, தீமையை ஏற்றுக் கொள்கின்றனர்.
பொது வெளியில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் பல தலைவர்கள், இரகசியமாக (மூடிய அறைக்குள்) நன்றி தெரிவிக்கின்றனர்.
பலஸ்தீனத்தை ஆதரிக்கும் சில நாடுகளின் முடிவு, அப்பாவி யூத மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்.
எங்களுடைய தொண்டையில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்க அனுமதிக்கமாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.



