டீசல் முடிந்ததால் வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாகன சாரதிகள் (Video)
எரிபொருள் நிலையத்தில் டீசல் முடிந்து போனதால் வாகன சாரதிகள் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியூடான பொது போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் தடைப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஹட்டன் நகரத்தில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் பெற்றுக் கொள்வதற்காக வாகன சாரதிகள் நேற்று பகல் முதல் வரிசையில் காத்திருந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியினை ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் நேற்று இரவு 7.45 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில், டீசல் பெற்றுக் கொள்வதற்காக உணவின்றி நின்று கொண்டிருப்பதாகவும், தற்போது டீசல் இல்லையென தெரிவித்துள்ள நிலையில் நாளை டீசல் பெற்றுக் கொள்ள வந்தால் மீண்டும் ஆரம்பத்திலிருந்து வரிசையில் நிற்க வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் அரச பேருந்துகளுக்கு மாத்திரம் டீசலை பெற்றுக் கொடுக்கும் நிலையில் ஏனையவர்கள் எவ்வாறு வாழ்வது என கேள்வியெழுப்பியுள்ளனர்.
எனவே டீசல் பெற்றுக் கொடுக்கும் வரை தாம் வீதியினை மறித்து போராடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஹட்டன் பொலிஸார் கொட்டகலை எரிபொருள் விநியோகிக்கும் பெற்றோல் கூட்டுத்தாபனத்துடன் தொலைப்பேசி மூலம் கலந்துரையாடி இன்று டீசல் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்ததனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.









மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan
