ஹட்டனில் கோர விபத்து: 60 பள்ளத்தில் விழுந்து உயிர் தப்பிய சாரதி
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா பகுதியில், சுமார் 60 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (17.03.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டல்கலை பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டி, கொட்டகலை பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக புளியாவத்தை நோக்கி செல்கையில், திடீரென பள்ளத்தில் விழுந்துள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், சாரதியும் காயமடைந்துள்ளார். விபத்து ஏற்பட்ட உடனே அப்பகுதியில் இருந்த பிரதேசவாசிகள் சாரதியை காப்பாற்றியுள்ளனர்.

ஆரம்ப விசாரணைகளில், சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் அல்லது மயக்கம் காரணமாக குறித் த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் போக்குவரத்து பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam