மர்மமான முறையில் சாரதி உயிரிழப்பு
சம்பூர் - பாட்டாளிபுரம் பிரதேசத்தில், வேலை செய்து வந்த, ரத்தினபுரி - எம்பிலிபிடிய பகுதியைச் சேர்ந்த, 35 வயதான பெகோ வாகன சாரதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, சம்பூர் - பாட்டாளிபுரம் பிரதேசத்தில், தற்போது குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
மேலதிக விசாரணைகளை
இந்தப் பகுதியில் குறித்த நபர், இம்மாதம் 14ஆம் திகதியிலிருந்து, பெகோ வாகன சாரதியாக பணிபுரிந்து வருகின்றார்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம்(29) மூதூர் வைத்தியசாலைக்கு சென்று, அங்கு, நோயாளர் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும், நேற்று(30) காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியேறியவர், மூதூர் ஜபல் நகர், 64 ஆம் கட்டை பகுதியில், அவர் தங்கி இருந்து வேலைக்குச் சென்ற இடத்திலிருந்து, சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிபதியின் உத்தரவிற்கு அமைய, சடலம் பிரேத பரிசோதனைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam