தெஹிவளை சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் நிறைவேறாத கனவு - துயரில் முழ்கிய நண்பர்கள்

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhushi Sep 12, 2026 06:25 AM GMT
Report

தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலின் போது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவரின் தந்தை வைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(11.09.2026) இடம்பெற்ற நிலையில், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தந்தை - ஹெட்டியாராச்சிங்கே நலின் துசந்தா, 17 வயதான கசுன் ரஸ்மகா மற்றும் அவரது 11 வயதான தம்பி அஜித் கிஹான் ஆகியோரே இந்த தாக்கதலின் போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

நள்ளிரவில் நடந்த கொடூரம்

சம்பவம் தொடர்பான விசாணையில்,

முச்சக்கர வண்டி சாரதியான நலின் அவருடைய மனைவியை பிரிந்து மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

அவருடைய மூத்தமகன் கசுன் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்தார், அதே சமயம் அவரது தம்பி எட்டாம் வகுப்பில் படித்து வந்தார்.

சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு, நலினும் அவரது இரண்டு குழந்தைகளும் வீட்டின் தரையில் ஒரு பாயில் உறங்கச் சென்றிருந்தனர். சுமார் 3.15 மணியளவில், வீட்டின் முன் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு நலின் கதவைத் திறக்கச் சென்றபோது, ​​கதவருகே இருந்த ஒருவர் வீட்டிற்குள் ஒரு கையெறி குண்டை வீசினார்.

தெஹிவளை சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் நிறைவேறாத கனவு - துயரில் முழ்கிய நண்பர்கள் | Dream Of Boy Who Tragically Died In Dehiwela

அதன் பின்னர் அந்த நபர் உடனடியாக கதவை மூடிவிட்டு, தனது மற்றொரு கூட்டாளியுடன் வெளியே ஒரு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.

வீட்டிற்குள் கையெறி குண்டு வெடித்ததில் நலினும் அவரது இரண்டு குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். மூவரையும் அக்கம்பக்கத்தினர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், தந்தை நலின் இரு கால்களிலும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுவர்களின் கடைசி ஆசை

மேலும், சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்த கசுன் ரஸ்மகா, வீட்டில் நிலவிய கடுமையான வறுமையின் காரணமாக தனது உயர்நிலை படிப்பைத் தொடர பாடசாலைக்குச் செல்லவில்லை. அடுத்த திங்கட்கிழமை முதல் ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலைக்குச் சேரத் தயாராகி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் நிறைவேறாத கனவு - துயரில் முழ்கிய நண்பர்கள் | Dream Of Boy Who Tragically Died In Dehiwela

இதேவேளை, என் அம்மா வீட்டை விட்டுச் சென்ற நாள் முதல், எனக்கும் என் தம்பிக்கும் உணவும் நீரும் வழங்கவும், பாடசாலைக்கு எங்களை அனுப்பவும் அப்பா கடுமையாகப் போராடி வருகிறார். அதனால், என்னால் உயர்நிலை படிப்புக்குச் செல்ல வழியில்லை. வகுப்புகளுக்குச் செல்ல என்னிடம் பணமும் இல்லை.

எனவே, நான் மீண்டும் பாடசாலைக்குச் செல்ல மாட்டேன். நான் என் வேலையைச் செய்வேன், என் தம்பிக்கு நன்றாகக் கற்பித்து அவனை ஒரு சிறந்த நிலைக்குக் கொண்டு வருவேன் என அவருடைய நண்பர்களிடம் கசுன் கூறியதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.    

இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பா..! வெளியான புதிய அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பா..! வெளியான புதிய அறிவிப்பு

மட்டக்களப்பில் ஆலய உற்சவத்தில் வெடி விபத்து - 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

மட்டக்களப்பில் ஆலய உற்சவத்தில் வெடி விபத்து - 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

YOU MAY LIKE THIS VIDEO..



7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US