யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறியப்பட்டாலும் நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கல்முனைப் பிரதேசங்களில் மலேரியா நோய்க்கிருமியான Anopheles stephensi அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் ஜீவனி ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.
மலேரியா பரவும் அபாயம்
இந்த நுளம்புகளை ஒழிப்பதற்காக நாடு முழுவதும் பூச்சியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்து வெளியிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
