வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீட்டுத் திட்டத்துடன் காணி : டக்ளஸ் தேவானந்தா (Photos)
வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு புதிய வீட்டுத் திட்டத்துடன் காணி வழங்குவது தொடர்பாக ஆராயவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (20.12.2023) சந்தித்த போது, மக்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலை மற்றும் கண்டாவளை மாகாவித்தியாலயம் ஆகியவற்றில் தங்கியுள்ள மக்களை அமைச்சர் இன்று காலை சந்தித்துள்ளார்.
மக்களின் விருப்பத்தை கேட்டறிந்த அமைச்சர்
இதன்போது, மக்களின் வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதியில் உள்ள மக்களின்
பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் வகையில், புதிய வீட்டுத்திட்டத்துடன்
பாதுகாப்பான இடத்தில் காணி வழங்குவதற்கான மக்களின் விருப்பத்தை அமைச்சர் கேட்டறிந்துள்ளார்.
மேலும், குளத்தின் நீர்மட்டத்தை குறைத்து அனர்த்த பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளமையால், தொடர்ந்தும் சில நாட்கள் வெள்ள நிலைமைகளை அவதானித்து வீடுகளுக்கு செல்லுமாறும் அவர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது கண்டாவளை பிரதேச செயலாளர் T. பிருந்தாகரன், கிராம சேவையாளர் உள்ளிட்ட பலரும் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |