யாழில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்த டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்(Photos)
யாழில் போதைப்பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ள தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று(12.09.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், பொலிஸார், மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளடக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் ஊடாக தகவல்களை பரிமாறி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
உணர்வு ரீதியான செயற்பாடு
இதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
''போதைப் பொருள் பாவனை என்பது இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தினையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றமையினால், அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அதிகாரிகள் உணர்வு ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
மேலும், இக்கலந்துரையாடலில், யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்படும்.
சட்ட விரோத மணல் அகழ்வு
மேலும், சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தல், முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும்'' என தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், சுகாதார தரப்பினர் உட்பட்ட அரச அதிகாரிகள் மற்றுமா பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் கலந்து கொண்டனர்.













ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 22 மணி நேரம் முன்

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
