வலுக்கும் குருந்தூர் விவகாரம்: வினோ நோகராதலிங்கத்திற்கு நீதிமன்ற அழைப்பாணை
நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பாணை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்றில் எதிர்வரும் (14.09.2023) ஆம் திகதி வியாழக்கிழமை முன்னிலையாகுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக குறித்த நீதிமன்ற அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள்
முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூஜை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அந்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்திருந்துள்ளனர்.
அந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் முதன் முதலாக வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள் தேவை - அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை News Lankasri
