மொரட்டுவையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்: வெளியாகிய சிசிரீவி காணொளி
மொரட்டுவை - எகெடஉயன விஜயபுர பிரதேசத்திலுள்ள கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துளனர்.
குறித்த சடலம் இன்று (12.09.2023) முற்பகல் கரையோதுங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பகுதிக்கு காரில் வந்துள்ளதாகவும் அங்கு காரை நிறுத்திவிட்டு கடலில் குதித்துள்ள காட்சிகள் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் மஹரகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரெனவும் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் சடலமாக மீட்க்கப்பட்ட நபரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam