தடுமாறாத கொள்கையுடைய சிறந்த தலைமைத்துவம் அவசியம்: டக்ளஸ் சுட்டிக்காட்டு
போலித் தேசிய தரப்பினரிடமிருந்து விடுபட்டு தடுமாறாத கொள்கையையும் சிறந்த தலைமைத்துவமும் அவசியம் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
தேர்தலில் மக்கள் எமது
வழிமுறைகளை ஏற்று அரசியல் பலத்தை வழங்க அணிதிரளவேண்டும் என்றும் டக்ளஸ் அழைப்பு
விடுத்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட டக்ளஸ் அம்மாவட்ட மக்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்ததிருந்தார்.
அரசியல் புலத்தில் மாற்றம்
இதன்போது அவர் மேலும் கருத்து கூறுகையில்,
தமிழர் அரசியல் புலத்தில் மாற்றம் வேண்டும் என தமிழ் மக்கள் உணர்ந்து விட்டார்கள். அதை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சாத்தியமாக்கவும் எண்ணுகின்றார்கள்.
மக்களின் இந்த அரசியல் தெளிவும் மன மாற்றமும் வரவேற்கத்தக்கது.
இந்நிலையில் தற்போதும் ஒரு அரசியல் மாற்றத்துக்கான சூழ்நிலை வந்துள்ளது. குறிப்பாக அந்த மாற்றம் போலித் தேசிய தரப்பினரிடமிருந்து விடுபட்டு தடுமாறாத கொள்கையையும் சிறந்த தலைமைத்துவத்தையும் கொண்டவர்கள் பக்கமாக வீசுவதே தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்கும்.
இதேவேளை தமிழர்களின் அரசியலில் மிக முக்கியமான தருணமாக இது உள்ளது’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |