பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்க அரசாங்கம் மறுப்பு!
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் இன்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 24ம் திகதி சேமோவாவில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்
இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ, பிரதமரோ அல்லது தாமோ பங்கேற்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சிலர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |