இந்தியாவினால் பெருந்தொகையான ஊசி மருந்துகள் அன்பளிப்பு
இலங்கையின் அரசாங்க மருத்துவமனைகளுக்கு 50,000 ஃபுரோஸ்மைடு ஊசி மருந்து இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அதனை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையே காணப்படும் நீண்டகால நட்பை நினைவுபடுத்தும் விதமாக இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த ஊசி மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
பல திட்டங்கள்
சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சினுள் எதிர்காலத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள பல திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும் தற்போது நடைபெற்று வரும் பல திட்டங்கள் மற்றும் திட்டங்களின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்த தகவல்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டன.
எதிர்வரும் காலத்தில் நாடு முழுவதையும் உள்ளடக்கிய ஆயிரம் ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவுவதன் மூலம் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தும் திட்டத்திற்கு இந்திய உயர் ஸ்தானிகர் விசேட பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சன் டிவியின் ரோஜா சீரியல் வில்லி நடிகை ஷாமிளி கட்டியுள்ள புதிய வீடு... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
