மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கையளிப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையின், வைத்தியசாலை அபிவிருத்திச்சபை தொண்டு அமைப்பின் அனுசரணையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் புதன்கிழமை (23.08.2023) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிதி பங்களிப்பு மற்றும் அனுசரணை
40 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரண பொருட்கள், அமைப்பின் தலைவர் சுபேதி தேரரால் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்கள் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு வழங்கும் வகையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


இதற்கான நிதி பங்களிப்பு மற்றும் அனுசரணையை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கையை சேராதவர்கள் வழங்கி உள்ளனர்.
குறித்த மருத்துவ உபகரணங்கள் நேரடியாக வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு
தருவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணப்பொருட்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அபிவிருத்திச்சபை என குறிப்பிடப்படும் தொண்டு அமைப்பின் அனுசரணையில் குறித்த அமைப்பின் தலைவர் சுபேதி தேரர் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஊடாக உரிய வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri