டெஸ்லா வாகனங்களை சேதப்படுத்தியவர்களுக்கு கடும் மிரட்டல் விடுத்த அமெரிக்க ஜனாதிபதி
டெஸ்லா வாகனங்கள் மற்றும் அதன் மையங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், குறித்த நபர்கள் எல் சால்வடாரில் உள்ள உலகிலேயே மிக மோசமான சிறைக்கு அனுப்பப்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா உட்பட பல நாடுகளில் எலோன் மஸ்க் மற்றும் அவரது டெஸ்லா வாகனங்களுக்கு எதிராக திடீர் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளது.
டெஸ்லா சொத்து
அதனை தொடர்ந்து டெஸ்லா சொத்துக்களைத் தாக்க பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தியதாக மூன்று பேர் மீது நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
சிலர் தங்கள் டெஸ்லா வாகனங்களில், எலான் மஸ்க் தனது சுய புத்தியை இழக்கும் முன்னர் வாங்கிய வாகனம் இதுவெனவும் ஸ்டிக்கர் பதித்துள்ளனர்.
அதனை தொடர்ந்தே டொனால்ட் ட்ரம்ப் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். சமீப நாட்களில் கடும் பின்னடைவை எதிர்கொண்டுவரும் எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா நிறுவனத்திற்கும் ஆதரவாக ஜனாதிபதி ட்ரம்ப் பேசி வருகிறார்.
அத்துடன் டெஸ்லா நிறுவனத்தை தமது ஆதரவாளர்களிடம் விளம்பரப்படுத்தவும் அதன் பங்குகளில் முதலீட்டை ஊக்குவிக்கவும் முயற்சிகளை முன்னெடுக்கிறார். கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் டெஸ்லா நிறுவனம் பங்குச் சந்தையில் 50 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம்
இதற்கு முதன்மை காரணமாக கூறப்படுவது ட்ரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையில் செயல்படும் DOGE என்ற அமைப்பின் செயல்பாடுகளே என தெரிவிக்கின்றனர். DOGE அமைப்பால், பல ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
பல அரசு அமைப்புகள் மூடப்பட்டு வருகிறது. இதன் எதிர்வினையாகவே மக்கள் டெஸ்லா நிறுவனத்தின் மீது திரும்பியுள்ளனர்.
மேலும், டெஸ்லா வாகனங்கள் மீதும் அதன் மையங்கள் மீதுமான தாக்குதல்களை உள்ளூர் பயங்கரவாதம் என ட்ரம்ப் நிர்வாகம் அடையாளப்படுத்தி வருகின்றது.
டெஸ்லா மீதான தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் குறைந்தது மூன்று நபர்கள் பெடரல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 6 மணி நேரம் முன்

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
