நாடாளுமன்ற அமர்வில் அதிகம் பேசப்பட்ட தேசபந்து தென்னக்கோன்
இலங்கையில்; இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான சர்ச்சை, நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் முக்கியப் புள்ளியாக இருந்தது.
இதன்போது, அவரது நடத்தை மற்றும் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அமர்வின் போது, பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, அரசாங்கம் நிலைமையைக் கையாண்ட விதம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.
தென்னகோனுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள்
எனினும், தென்னகோனின் சொத்துக்களைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையே அவர் சரணடைய வழிவகுத்ததாகவும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
அவர் சரணடைந்தபோது, பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், இந்த பொலிஸ் அதிபருக்கு வாக்களிக்கும் உரிமை கூட இல்லை என்று கூறினார். அவர் ஒரு பேய் என்று கூறினார். எனினும் இவ்வளவு காலமாக தென்னகோனை யார் பாதுகாத்தார்கள்? என்று தயாசிறி கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வழக்கில் மீண்டும் முன்னிலையாகப் போவதில்லை என்று பிரதி மன்றாடியார் நாயகம் கூறியுள்ளார்.
எனவே, அவரது இளைய அதிகாரிகள் அதைக் கையாள்வார்கள் என்றும் அவர்; தெரிவித்துள்ளார். எனவே இதுதான் இன்றைய சட்டம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசேகர கூறினார்.
இந்தநிலையில், பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, இந்த விடயத்தில், சட்டம் சரியான முறையில் செயற்படுத்தப்பட்டதாக வலியுறுத்தினார்.
தென்னகோனுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நடத்தப்பட்டன என்றும், தென்னகோனின் இருப்பிடம் தெரியும் என்று தாம் கூறியதாக கூறப்படும் எந்தவொரு கூற்றுகளையும் மறுத்துள்ளார்.
தற்போதைய நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை
தொழில்துறை மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியும் விவாதத்தில் பங்கேற்று, ஹன்சாட்டில் சில தகவல்களைப் பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார்.
தகவல்களின் உணர்திறன் மற்றும் அதன் சாத்தியமான தாக்கங்களை அவர் எடுத்துரைத்தார்.
இந்தநிலையில், சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும், அதிகாரிகள் அச்சமின்றி சுதந்திரமாகப் பேசுவதை உறுதி செய்வதற்கும் தற்போதைய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை ஹந்துன்நெத்தி எடுத்துரைத்துள்ளார்.
முன்னைய நாடாளுமன்றங்களில், மூத்த ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் இருப்பைக் கண்டு உறுப்பினர்கள் எவ்வாறு மிரட்டப்பட்டனர் என்பதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
தற்போதைய நிர்வாகத்தின் பணிவு மற்றும் வெளிப்படைத்தன்மை காரணமாக இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தைரியமாகப் பேசுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 3 மணி நேரம் முன்

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam
