சிறையிலுள்ள தேசபந்துவுக்கு சிறப்பு பாதுகாப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தற்போது தும்பரை சிறைச்சாலையில் பாதுகாப்பான அறையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறப்பு பாதுகாப்பு
இந்தநிலையில், அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை - வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று தொடர்பில், தேசபந்து தென்னக்கோனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தலைமறைவாகி பல நாட்களின் பின்னர் கடந்த 19ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னக்கோனை மீண்டும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்திய நிலையில், அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
