போர் நிறுத்த புடின் சம்மதிக்கவில்லை என்றால்... ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த புடின் சம்மதிக்கவில்லை என்றால் மிக கடுமையான விளைவுகள் ஏற்படும் அது எப்படி இருக்கும் என நான் கூற வேண்டியிருக்காது ஆனால் மிக கடுமையான ஒன்றாக இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்து வரும் போரானது 3 ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர், இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார்.
ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் நேரில் சந்தித்து பேசவுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பேசும்போது, ரஷ்ய ஜனாதிபதிர் விளாடிமிர் புடினுடன் நாங்கள் சந்திப்பு ஒன்றை நடத்த இருக்கிறோம்.
முதல் 2 நிமிடங்களிலேயே ஒப்பந்தம் ஏற்படுமா? இல்லையா? என்பது எனக்கு சரியாக தெரிந்து விடும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முத்தரப்பு கூட்டம்
இதன்போது உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த புடின் சம்மதிக்கவில்லை என்றால் மிக கடுமையான விளைவுகள் ஏற்படும் அது எப்படி இருக்கும் என நான் கூற வேண்டியிருக்காது ஆனால் மிக கடுமையான ஒன்றாக இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், முதல் கூட்டம் நன்றாக நடந்தால், உடனடியாக 2ஆவது கூட்டம் ஒன்றை நாங்கள் நடத்துவோம்.உடனடியாக அதனை நடத்தவே நான் விரும்புவேன் என குறிப்பிட்டுள்ளார்.
புடின் மற்றும் ஜெலன்ஸ்கி பங்கேற்கும் முத்தரப்பு கூட்டத்திற்கான சாத்தியம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 மணி நேரம் முன்

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
