பதவிக்கு வந்ததன் பின் முதன்முறையாக புடினுடன் பேசிய ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் தொலைபேசியில் கலந்துரையாடியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னரே, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என உறுதியளித்திருந்தார்.
எனினும், ஜனாதிபதியாக பதவியேற்றத்திலிருந்து அது தொடர்பான நடவடிக்கைகளை ட்ரம்ப் முன்னெடுக்கவில்லை.
ட்ரம்ப் வலியுறுத்தல்
இந்நிலையில், இது தொடர்பாக புடினுடன் ட்ரம்ப் தொலைபேசி மூலம் கலந்துரையாடியதாக கூறும் அமெரிக்க ஊடகங்கள், மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ட்ரம்ப் கூறியதாகவும் தெரிவித்துள்ளன.
அத்துடன், அப்பாவி மக்கள் இறப்பது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
