ரஸ்ய - உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு ஜெலன்ஸ்கி அவசியமில்லை! ட்ரம்ப் திட்டவட்டம்
ரஸ்ய(Russia)- உக்ரைன்(Ukraine) போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி இருப்பது அவசியமில்லை என்று கருதுகிறேன் என்று அமெரிக்கப ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து ரஸ்ய - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக தெரிவித்து வருகின்றார்.
ரஸ்ய- உக்ரைன் போர்
அவர் ரஸ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொலைப்பேசியில் உரையாடியுள்ளார்.
மேலும் சவுதி அரேபியாவில் அமெரிக்கா(USA), ரஸ்யாவின் உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் ட்ரம்பை ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையடுத்து ஜெலன்ஸ்கியை சர்வாதி காரி என ட்ரம்ப் விமர்சித்திருந்த நிலையில், ஜெலன்ஸ்கியை டிரம்ப் மீண்டும் சாடியுள்ளார்.
பேச்சுவார்த்தை
இது தொடர்பாக ட்ரம்ப் தெரிவித்ததாவது, “ரஸ்ய ஜனாதிபதி புடினுடனான பேச்சுவார்த்தை நன்றாக இருந்தது.
ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி இருப்பது அவசியமில்லை என்று கருதுகிறேன். அவர் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் கடுமை காட்டி வருகிறார்.
இதனால் நான் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ வேறு உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமில்லை. ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவர புதினும், ஜெலன்ஸ்கியும் நேரடியாக சந்தித்துப் பேச வேண்டும்.
ஜெலன்ஸ்கியின் பிடிவாதப் போக்கை இனியும் தொடரவிடப்போவதில்லை. உக்ரைன் எல்லா வகையிலும் ஒரு துணிச்சலான தேசம் என்பதையும் பதிவு செய்கிறேன். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர புடின் விரும்புகிறார்.
அவர் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பா தலைவர்கள்
இதேவேளை, உக்ரைனுக்கான ஆதரவு நிலையில் ட்ரம்ப் விலகி செல்வதையடுத்து ஐரோப்பா தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி இருந்தனர்.
இதுதொடர்பாக ட்ரம்ப் கூறும்போது, உக்ரைன் போரை நிறுத்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரானும் எதுவும் செய்யவில்லை என்றார்.
இதற்கிடையே இந்த இரு தலைவர்களும் அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
