டொனால்ட் டிரம்ப்பின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எதிர்த்து வழக்கு
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவந்துள்ள நிலையில் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று டொனால்ட் டிரம்ப்பின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படம் பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் பெண்களிடம் டிரம்ப் தவறாக நடந்துகொள்வது போன்ற அவதூறு காட்சிகள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக தனது முதல் மனைவியான இவானாவிடம் தவறாக நடந்துகொள்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இது பார்வையாளர்களிடம் கடும் அதிர்வை ஏற்படுத்தியதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தேர்தலில் பாதிப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடும் நிலையில் இந்த படம் அவருக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் டிரம்ப் சட்டத்தரணிகள் இது தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் பொய் என்றும் படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |