ட்ரம்பை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்: வெளியான தகவல்
அமெரிக்காவின் (US) முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீது நேற்று மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்செய்தியினை அமெரிக்காவின் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள ட்ரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்கு வெளியே இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இரண்டாவது தாக்குதல்
இதன்போது, ட்ரம்ப் அந்த மைதானத்தில் இருந்துள்ள நிலையில் அங்கிருந்த இரண்டு நபர்களுக்கு இடையே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ட்ரம்ப், அவ்விடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான ஒரு தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
