பிரித்தானியாவில் 3 கொலை செய்த குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவர் கைது
பிரித்தானியாவில் (UK) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 3 பேரை கொலை செய்ததன் குற்றச்சாட்டில் 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
லூட்டன் நகரில் (Luton) உள்ள குடியிருப்பொன்றில் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்களை கொலை செய்ததாக குறித்த சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் பொலிஸார் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அப்பகுதியை சேர்ந்த நிக்கோலஸ் புரோஸ்பர் என்ற 18 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த சிறுவன் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் உயிரிழந்த மூவரையும் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, அந்த சிறுவன், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
