ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற எட்டு புலம்பெயர்ந்தோர் பலி: தீவிர சிகிச்சையில் 10 மாத குழந்தை
அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான ஆங்கில கால்வாயைக் கடக்க முயன்ற எட்டு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதுடன் 10 மாத குழந்தை ஒன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவமானது, வடக்கு பிரான்சில் உள்ள கடற்கரை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் போது புலம்பெயர்ந்தோர் பயணித்த படகானது, பாறைகளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது, விபத்தில் சிக்கியவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 10 மாத குழந்தை ஒன்று தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, நேற்றிலிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் சுமார் 200 புலம்பெயர்ந்தோர் இவ்வாறான ஆபத்தான பயணங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri