டொனால்ட் ட்ரம்பின் சதி முயற்சி: நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு(Video)
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தோல்வியை தாங்கி கொள்ளாமல் சில சதி முயற்சியை மேற்கொண்டதாக புதிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அமெரிக்காவை ஏமாற்றும் வகையில் சதிகளை செய்தமை, சாட்சிகளை கலைப்பது, குடிமக்களுக்கு எதிரான சதிகளை செய்வது உற்பட்ட நான்கு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் டொனால்ட் ட்ரம்ப் இந்த விடயங்களில் தவறு செய்யவில்லை என மறுத்ததுடன் , இந்த வழக்கு கேலிக்குரியது எனவும் விமர்சித்துள்ளார்.
எனினும் தற்போதுள்ள ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட வழக்குகளை முன்னிலைப்படுத்தி அவர் நாளைய தினம்(03.08.2023) வொஷிங்டனில் உள்ள நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் ட்ரம்ப் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான இலங்கை மற்றும் உலக அரசியல் நிலவரங்களை அறைந்து வருகிறது இன்றைய செய்திவீச்சு...

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
