'நான் திரும்ப வந்துவிட்டேன்' சமூக ஊடகங்களில் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி
டொனால்ட் ட்ரம்பின் முடக்கப்பட்ட பேஸ்புக், யூடியூப் கணக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின் வழமைக்கு திரும்பியுள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தார். இதனிடையே, 2021 தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்
ஆனால், தனது தோல்வியை ஏற்க மறுத்த டொனால்ட் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறை தூண்டும் வகையில் பேசினார். இதை அவர் தனது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பினார்.
அவரது பேச்சையடுத்து ஜனவரி 6ம் திகதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வன்முறையை தூண்டியதாக டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன.

'நான் திரும்ப வந்துவிட்டேன்'
இந்நிலையில், 2 ஆண்டுகளாக முடக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன. சமூக ஊடக பக்கங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தனது பேஸ்புக், யூடியூப் பக்கங்களில் 'நான் திரும்ப வந்துவிட்டேன்' என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை இணைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam