பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்! மத்திய வங்கியின் அறிவிப்பு
2024 நவம்பர் இறுதியில், இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித்து 6,462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் 4 முதல் 5 சதவீதம் வரை குறைவாக பதிவாகும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமாகி, சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கும்போது, பொருளாதார குறிகாட்டிகள் சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம்
இதன்படி, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு நவம்பர் 2024 இறுதியில் 6,462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
2024 டிசம்பர் 27 ஆம் திகதி, அனைத்து பங்கு விலைக் குறியீடு (ASPI) 4.89 சதவீதம் அதிகரித்து 15,535.60 புள்ளிகளுக்கு சென்று புதிய நேர சாதனையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையில், உணவு அல்லாத பிரிவில் 3.1 சதவீதம் பணவாட்டம் பதிவாகியுள்ளது.
2024 டிசம்பர் 27 வரை, இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக 10.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், S&P SL 20 இன்டெக்ஸ் 5.56 சதவீதம் அதிகரித்து 4,666.65 புள்ளிகளாக அமைந்தது, கடந்த வாரத்தின் குறியீட்டு மதிப்புகளுடன் ஒப்பிடும்போது, 2024 ஜனவரி முதல் அக்டோபர் மாதத்திற்கும், ஒட்டுமொத்த வரவு - செலவு திட்ட பற்றாக்குறை ரூ. 1,060.7 பில்லியன்களாகவும், 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 1,547.0 பில்லியனாகவும் பதிவாகியுள்ளது.
வளர்ச்சிப்போக்கு
2024 நவம்பர் மாதத்தில், தொழிலாளர்களின் வருமானம் 5,399.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது, மேலும் மாத வருமானம் சுமார் 530.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
2024 நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் மொத்த ஏற்றுமதி, வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,269.33 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது, இது 2023 ஆம் ஆண்டின் இதே காலத்திற்கு 0.04 சதவீதம் சிறிய அதிகரிப்பை குறிக்கின்றது.
சேவைகள் ஏற்றுமதி நவம்பர் 2024 இல் 326.23 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2023 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியில் 20.89 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் இறுதியில், சுற்றுலாத்துறையின் மொத்த வருவாய் 2,806.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
மேலும், இந்த வருமானம் ஒவ்வொரு மாதமும் 270 மில்லியன் அமெரிக்க டொலர்களை கூடுதல் அளவில் பெற்று, 3 பில்லியன் டொலர்களை தாண்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

அந்த பிரச்சனையால் 15 ஆண்டுகள் காத்திருந்து அவரை திருமணம் செய்தேன்... கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் Cineulagam
